Monday, January 9, 2012

இதய பூர்வமான நன்றிகள் உரித்தாகுக...


அல்ஹாஜ் V.M. பீர்முஹமது அவர்கள் தான் 
"
கல்லூரி தந்தை" 
என்று சுட்டிக்காட்டிய ஒரு சில இணையதள வெளியீடுகளும்பின்னூட்டங்களும் பின் வருமாறு:

படங்களின் மீது ஒரு முறை சொடுக்கி  பெரிதாகா விட்டால்  மீண்டும் ஒரு முறை சொடிக்கி படித்து பார்க்கவும்.
http://www.inp.ilayangudi.org/

Wikipedia/Tamil

nidur.info

Wikimapia

Sivagangaionline

Malaya Burma Star


Wapedia


I.T.I Velli vizha Malar/www.ilayangudi.org



www.ilayangudikural.com/ comments


www.ilayangudikural.com /A.E.Naina Mohamed Ambalam



www.ilayangudi.org/ comments/ALAM

இத‌ன் வெளியீட்டாளர்களுக்கும்,
இணையதள‌த்தில்
பின்னூட்டம் அளித்தவர்களுக்கும்
எங்களது
இதய பூர்வமான நன்றிகள்
உரித்தாகுக..
ஆமீன்



அன்று கல்லூரிக்கு கிள்ளிப்போட்டாரா! அள்ளிப்போட்டாரா!

மறைக்கப்பட்டு வரும் உண்மை,

இன்னும் இளையான்குடி பொது மக்கள் அறிந்தும் அறியாமல் வெளியில் 
காட்டிக்கொள்ளாமல்  இருப்பவர்களுக்கும், மறைத்து வைத்தது மறைந்தே இருக்கட்டும் என்றும், இன்று கல்லூரியில் பதவிக்கு வந்து விட்டால் ஒரு வழியாய் அவரவர் கணவு நிறைவேறிவிடும் என்ற மமதையில் இந்த உண்மையை மறைக்கப்பாடுபடும் நல்ல உள்ளங்களுக்கும், இப்படி கல்லூரிக்கு கொடுத்ததாக சொல்கிறார்களே!  இது உண்மையா? என்ற சந்தேக கண்கொண்டு பார்ப்பவர்களுக்கும், குறிப்பாக இளை. இளைய சமுதாயத்தினருக்கும் 
 சமர்ப்பனம்..


             Page 1                                                                                                             Page 2
Click to Enlarge

     Page 3                                     Page 4                                                Page 5

EC For Donated Land

கல்லூரிக்கு அல்ஹாஜ் V.M. பீர்முஹமது அவர்கள் அளித்த நில‌ தான‌ ப‌த்திர நகலின் சாராம்ச‌ம்:


ரூ.3000.00 மதிப்புள்ள தான செட்டில் மெண்டு பத்திரம்

1970ம் வருஷம் ஏப்ரல் மீஉ 20உ இருபது தேதிக்கு சாதாரன வருசம் சித்திரை மீஉ 12 உ.
இளையாங்குடி கல்லூரிகழகத்திற்காக காலேஜ் சொசைட்டிக்காக சிவகங்கையிலிருக்கும் கிழக்கு ராமநாதபுரம் மாவட்ட பதிவகத்தில் S 64/1968 ம் எண்ணாக பதிவு செய்திருக்கிறபடி மேற்படி கழகத்தலைவரும் பிரதிநிதியுமான இளையாங்குடி டவுன் ஹவுத் அம்பலம் தெரு 9ம் என் உள்ள இடத்தில் வசிக்கும் ஜனாப் வி.காதர் அம்பலம் அவர்கள் குமாரர் வியாபாரம் விவசாயம் ஜனாப் V.K. இபுறாஹிம் அலி அம்பலம் அவர்களுக்கும் இனிமேல் மேற்படி ஸ்தானத்தை வகிப்பவர்களுக்கும் இளையாங்குடி டவுன் ஊரணிக்கரைத் தெரு 27 நிர் வீட்டில் வசிக்கும் வாஞ்சூர் முஹமது அவர்கள் குமாரர்  விவசாயம் வியாபாரம் ஹாஜி V.M.பீர்முஹமது அவர்கள் எழுதிக்கொடுத்த தான செட்டில்மெண்டுப் பத்திரம்இளையான்குடி வட்டாரத்தில் மக்கள் கல்வி வளர்ச்சிக்குத்தேவையான கல்லூரி ஆரம்பிக்க வேனுமென்றும் நீடித்த காலமாய் எனக்கு இருந்த எண்ணத்தின்படி மேலேகண்ட கல்லூரிக்கு நிலம் தேவைப்படுவதாகத்தெரிந்து,மேற்படி பொதுக்காரியத்திற்காக தர்ம சிந்தனையாய் நான் 19.04.1970ல் ஆ.க.நாஹூர் கனி ராவுத்தருக்காக மேற்படியாரின் பவர் ஏஜண்டாகிய இளையாங்குடி ந.சி.ரா.அபுத்தாஹிர் அவர்களிடமிருந்து ரூ 2500.க்கு நான் கிரையபத்திரம் எழுதி ரிஜிஸ்தர் செய்து வாங்கிய மூலம் எனக்கு பாத்தியமான அனுபவமான தற்கால மதிப்பின்படி ரூ 3000 ரூபாய் மூவாயிரம் பெறுமானமுள்ள கீழ்கண்ட புஞ்சை நிலத்தை மேற்படி கல்லூரிக்கழகக் காரியத்துக்காக இந்த தான செட்டில்மெண்டு மூலமாக நான் பாத்தியப்படுத்தி வைத்து சொத்தின் சக‌ல விதப் பொஷிஸன் வகையராவையும் மேற்படி கல்லூரிக்கழகத் தலைவர் முறையில் தங்களிடம் நான் ஒப்புவித்துவிட்டதால் தாங்களும் தங்கள் ஸ்தானங்களைப்பின் வகிப்பவர்களும் சர்வ சுதந்திரப் பாத்தியமாய் என்றென்றைக்கும் இஷ்டப்படி ஆண்டனுபோகம் செய்து கொள்ள வேண்டியது.
மேற்படி சொத்துக்குண்டான பட்டாவை மேற்படி கல்லூரியின் பெயரில் மாற்றுவதற்க்கு மேற்படி நமூனாவும் கொடுத்திருக்கிறது மேற்கண்ட என் பெயரிலுள்ள ரிஜிஸ்தர் கிரையப்பத்திரமும் இத்துடன் இருக்கத்தக்கது.

சொத்து விபரம்

கிழக்கு ராமநாதபுரம் ரிடி இளையாங்குடி சப்டி இளையாங்குடி துனைத்தாலுகா, இளையாங்குடிடவுன் பஞ்சாயத்து இளையாங்குடி கிராமம் தெற்கு வட்டத்தில்
இளையாங்குடி பரமக்குடி  ரஸ்த்தாவுக்கும் கிழக்கு, சர்வே 212/2 நிர் கு.சி.ஜெயினுலாபுதீன் அம்பலமிடமிருந்து கல்லூரிக்கு ஏற்கனவே கிரையம் வாங்கிய புஞ்சைக்கும் தெற்கு, சர்வே 211/2 நிர் இ.அப்துல் ரஜாக்கு வகையராவிடமிருந்து மேற்படி கல்லூரிக்கு கிரையம் வாங்கிய புஞ்சைக்கும் மேற்கு,சர்வே 213 நிர் பொ.அ.ந.காதர் மீறா புஞ்சைக்கும் வடக்கு. இதற்குள்ளான 342 நிர் பட்டாவில் கண்ட‌சர்வே 212/3 நிர் புஞ்சைத்தாக்கு 1க்கு ஏ.2 செண்டு 78 ஏக்கர் இரண்டு செண்ட் எழுபத்திஎட்டு இதற்கு  1.12.51.ஆர் மேற்படி நிலம் தற்கால மதிப்பு ரூ 3000 பெரும்.
                                                                                           Sd. V.M.PEER MOHAMED

சாஷிகள்:

1)  A.M.Syed Ibrahim S/o  A.E. Mohamed Ali. Ilayangudi..

2) முத்துவேல் பிள்ளை.ஹெட்மேன்.S/o. உரும‌ன‌ப்பிள்ளை அரியாண்டிபுர‌ம்.

இது எழுதிய‌து  இளையாங்குடி முத்து ராக்கு பிள்ளை ம‌க‌ன் தெ.மு.ந‌ட‌ராஜ‌ன் பிள்ளை



Friday, April 24, 2009

இது கதையல்ல!கற்பனையல்ல!சர்சைக்கு முற்றுப்புள்ளி:

இது கதையல்ல! கற்பனையல்ல! சர்சைக்கு முற்றுப்புள்ளி:

இன்று நடப்பதென்ன???

ஆனால் அன்று நடந்ததென்ன? விளக்கம் கேட்டோம், பதில் வெறுப்பாக வந்தது!

மறுபடியும் தொடர்பு கொன்டு அன்பாக விளக்கம் கேட்டோம், பதில் கோபமாக வந்தது..

விட்டோமா? முயற்ச்சியை, "நல்லவர்களின் முயற்சி வீன் போவதில்லை":

எங்கள் கேள்விகளுக்கு பதில்,அருவியாக அள்ளித் தெளித்தது...

அப்படி பெறப்பட்ட பதிலை அப்படியே தருகிறோம்.. நாங்கள் என்ன கேள்வி கேட்டோம்?

யாரிடம்?


"1970 ல் தங்கள் தகப்பனார் காலேஜ் கட்டி கொடுத்த விபர‌ங்களை, நீங்கள் ஊரிலேயே இருந்ததினால் கண்டிப்பாக, உண்மையான நடவடிக்கைகள் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு அதிகம்.அந்த விபரங்களை எங்கள் இணையதளத்திற்கு கூறுவீர்களா??‍.. இது கேள்வி...

யாரிடம்???

மர்ஹூம் ஹாஜி.வி.எம். பீர்முஹமதுவின் இளைய மகனிடம்;


அவரின் பதில் இதோ;

" நான் விபரமறிந்து நாட்களில் நான் பார்த்தது, அனேகமாக 1968.69ல் இருவர் காமராஜர் ரோட்டில், ஒருவர் தன்னுடைய கழுத்தில் 'பறை' என்ற மோளத்தை அடித்துக்கொன்டும், மற்றவர் ஒரு போஸ்டர் அடித்த தள்ளு வண்டியைத் தள்ளிக் கொன்டும், நமதூருக்கு கல்லூரி வருகிறது, நன்கொடையினைத் தாருங்கள், என்று சத்தமிட்டும் ஊர்வலம் போவதைப் பார்த்திருக்கிறேன்.


அவர்கள் இருவர், ஜனாப்.ஹவுத் நையினார் அம்பலம், ஜனாப். எம்.எஸ்.அபுதாஹிர் (மொட்டச்சி) ஆவார்கள்.. பின்னாளில் அவர்கள் ஒரு நோட்டீஸை என் தாயாரிடம், எங்கள் வீட்டிற்கு வந்து, கொடுத்து இதை தகப்பனாருக்கு (சிங்கப்பூருக்கு) அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொன்டார்கள்..

1970,மார்ச் மாதம் 15ந்தாம் தேதியில்,என்னுடைய தகப்பனார், தன்னுடைய "புனித ஹஜ்ஜை" நிறைவேற்றி விட்டு ஊர் வந்து சேர்ந்தார்கள். இவர்கள் சிங்கப்பூரிலிருந்து மெக்கா சென்றதால்,சொந்த ஊர் வந்தவுடன், வீட்டில், ஓர் பெரிய விருந்து நடந்தது. விருந்து முடிந்தவுடன், நன்னா வி.கே.இபுறாஹிம் அலி அம்பலம் அவர்கள், ஹவுத் நயினார், ஓ.ஆர்.இபுறாகிம் அலி, காதர் இபுறாஹிம், எம்.எஸ் அபுதாஹிர். இவர்களெல்லாம் கல்லூரி விசயமாய் பேச, தகப்பனாரும் வாக்கு கொடுத்து விட்டார்.

அதன் படி இன்னும் பல பேருடைய உதவி வேன்டி, என்னுடைய தகப்பனார் ஒரு கார் பிடித்து, அதில் அவரும், ஹவுத் நைனார், ஓ.ஆர்.இபுறாஹிம் அலி, டாக்டர்.ஏ.ஐ.முகம்மது சரீப், எம்.எஸ்.முஹமது உசேன், ஆகியோர் இராமனாதபுரம் மாவட்டத்திலுள்ள‌ ஒரு பெரிய கொடை வள்ளலைப் பார்த்து கல்லூரிக்கு நிதி வேண்ட, அவர்களோ, நிதி தருவதாகவும், கல்லூரிக்கு அவர்கள் குறிப்பிட்ட பெயரை வைக்க வேன்டியும், கேட்டுக் கொள்கின்றனர்.. இதை யோசித்து இக் குழு மனம் குழம்ப,



என்னுடைய தகப்பனார்,'"நைனாரெ, ரொம்ப யோசிக்காதீங்க, நானாச்சு, கல்லூரிக்கழக விருப்பப்படி குறித்த நேரத்தில் காலேஜ் திறந்துடுவோம்"
என்று தைரியம் கூற,


ஊர் வந்தவுடன் ஒரு சிலர் உணர்ச்சி வசப்பட்டு, காலேஜுக்கு உங்களுடையெ பெய‌ரையே வைத்து விடலாம் என்றதும், இவர் மறுக்க, டாக்டர். ஜாஹிர் உசேன் கல்லூரி என்றே, முதல் முடிவே இறுதியாகிறது..


எங்கள் தகப்பனார் கட்டிட வரைபடப்படி, முதன் முதல் கட்டிடத்தை தானே நின்று கட்டிக் கொடுத்து விடுகிறேன் என்று, அதற்குன்டான் வேலையை தொடங்கிவிட்டார்,




இக் கல்லுரி முகப்பு இடம், பரமக்குடி ரோட்டில் முகப்பு வாயில் வர வேண்டும் என்பதற்காக 19/04/70 ல் ஜனாப் அபுதாஹிரிடம், 2 ஏக்,78 செண்டு இடம் கிரையம் வாங்கி, மறு நாளே, 20/04/70 அன்று கல்லூரிக்கழகத்திற்கு (இளை சப் ரி.எண் 472/70) இனாமாக ரிஜிஸ்தர் செய்து கொடுத்ததினால்,




28/04/1970 அன்று நம் கவர்னர் மேதகு உஜ்ஜல் சிங் அவர்களால், அந்த இடத்தில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது..




அதற்குப்பின் கட்டிட வேலைகள் மிக விறு விறுப்பாக, நடக்க,
எங்களுடைய பண்னையில், (அரியாண்டிபுர கிராம ஆட்கள்) வேலை செய்த அணைவரும் இக்கட்டிடத்துக்காக உழைத்தார்கள்
.
தினமும் என் தகப்பனார் கட்டிட இடத்திற்கு தன்னுடைய மாட்டு வண்டியில் செல்வார், இதைப் பார்த்து ஜனாப். அமீன் நயினார் ஹ‌வுத் அவர்கள், பரமக்குடி பி.பி.டி பஸ் கம்பெனியிலிருந்து இளையான்குடியிலிருந்து கல்லூரி கட்டிடயிடம் வரை செல்ல"இலவச பஸ் பாஸ்" வாங்கி வந்து கொடுத்தார்கள்.




ஆனால், இலவசம் விரும்பாததினால் தன்னுடைய 55 வயதில் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொன்டு(அரியாண்டிபுர தோப்பில்), கற்றபின் சைக்கிளில் சென்று கட்டிட வேலைகளை கவனித்தார். ஜனாப் அமீன் நைனார் அவர்களும் தினமும் கட்டிட இடத்திற்கு சென்று கவனித்து வருவார்கள்.




இச் சமயத்தில் என்னுடைய ச‌கோதரர் ஒருவரும், ஊரில் இருந்ததால் அவரும் இவ்விசயத்தில் உதவியாக இருந்தார். கட்டிடம் முழுமை பெறும் போது, மேற்கூரை சிமென்ட் சீட் போடும் பொழுது (இவ் வேலையை திரு.மைக்கேல் ஆசாரி அவர்கள் செய்தார்)


முடியும் தருவாயில்,ஒரு இரவில் பயங்கரமான சூரைக்காற்று வீசியதால் கூரை சரிந்து விழ, உடணே அரியாண்டிபுரத்திலிருந்து 100 பேருக்கு மேல் அழைத்து வந்து சரி உடனடியாக‌ செய்தது நான் கண்னால் பார்த்த விசயம்.

திட்டமிட்டபடி எல்லா வேலைகளையும் சிறப்புற செய்து முடித்து,




மே 1970ல் தகப்பனார் கரஸ்பான்டென்ட் ஆகவும் கல்லூரிக்கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, என் தகப்பனாரால் ஆசிரியர்கள், அலுவல்கஸ்தர்கள், சிப்பந்திகள் ஆகியேருக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் போடப்படுகிறது.
ஜுலை 1,1970 ல் கல்லூரி தொடக்கம்

ஜூலை 5 1970ல்,அதிகாரப்பூர்வமான, நீங்கள் பார்த்த அழைப்பிதழில் கண்டபடி , ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி ஆரம்பம்.

கண்ணியமிகு காயிதே மில்லத்
அவர்கள், அன்று காலையிலே ஊர் வந்து. ஜனாப்.பி.என்.ஐ . அபுதாலிப் அவர்கள் வீட்டில் தங்கி, அன்று மதியம் எங்கள் வீட்டில் அவருக்கும்,ம‌ற்றைய பெரியோர்களுக்கும், விருந்து நடந்தது.அது ஒரு மற‌க்கமுடியாத நிகழ்ச்சி..

அன்று மாலை 4 மணிக்கு மேல் விழா ஆரம்பித்து, மேடை நிறைந்து காணப்பட்டது. அந்த மேடையில் முன்னால் ஒரு மூலையில் என் சகோதரரும் ,நானும்(அச்சமயம் நான், இ.உ.பள்ளியில் 6 ம் வகுப்பு படிக்கிறேன்) அமர்ந்து விழாவில் பேசிய அத்தனை பேருடைய பேச்சுக்களையும், டேப் ரிக்கார்டர் மூலம் பதிவு செய்தோம்.




அந்த நிகழ்ச்சியின் பதிவுகள் இன்றும் நாங்கள், திரும்ப, திரும்ப கேட்டு ரசிக்க முடிகிறது.

மாண்புமிகு அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களின் கோர்வையான, அடுக்கு மொழி பேச்சிலோ" நாட்டுக்கு நாடு, கண்டத்துக்கு கண்டம், ஊருக்கு ஊர் ஒர் பீர் முஹமது வேண்டும்" என்பதும்,

ஜனாப்.அமீன் நைனார் ஹவுத் அவர்கள் இயற்கையான,சாதாரன பேச்சு நடையில், பேச்சு முழுக்க என் தகப்பனாருடைய உழைப்பைப்பற்றி, வெளிப்படையான பேச்சு தான், சுவரசியமானது ஆகும்..


அதுமுதல் கல்லூரி நல்லதொரு பீடு நடை போட்டு வந்தது, 14/08/1970ல் கல்லூரி பொதுகுழு கூட்டத்தில் ஒரு சில மெம்பர்கள் நடந்து கொண்ட விதம்,என் தகப்பனார் மனதைப் புன்படுத்தி, ஜனாப்.அமீன் நைனார் ஹவுத அவர்கள் என்னுடைய தக‌ப்பனாரை எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும், முடியாமல் 25/08/190 ல் தன்னுடய கரஸ்பான்டென்ட் பத‌வியை ராஜினாமா செய்தார்க‌ள்..

இச் சம்பவத்தை உருவாக்கிய "ஒட்டுண்ணிகளையும்" "சாருண்ணிகளையும்" நாங்கள் அறிவோம்..

இக் கல்லூரி உருவாக்க, என்னுடைய தகப்பனாருக்கு உறுதுனையாய் நின்ற மர்ஹூம்.ஜனாப். அமீன் நெயினார் ஹவுத் அம்பலம் அவர்களுக்கு என்னுடைய‌ இத‌ய பூர்வமான நன்றி.. இவர்,(அமீன் நெயினார் ஹ‌வுத்) இதைத் தவிர, எனக்குத் தெரிந்த, நம் ஊருக்கு, செய்த நல்லவைகளை, பிற‌கு தெரிவிக்கிறேன்..


இவையாவும் நம் ஊரில்,அப்பொழுது இருந்த, இப்பவும் இருக்கின்ற நிறைய பேர் மிக,மிக நன்றாக அறிவார்கள்.. ஆனால் அதில் சிலர் வாய்மூடி மவுனியாகி விட்டார்கள்.. என்ன காரனமோ
"யாம் அறியேன் பராபரமே".

என்னுடைய தகப்பனாருக்குப்பின், எங்கள் குடும்பத்திலிருந்து யாருமே கல்லூரி கழகத்தில் அங்கத்தினர் கூட இல்லை.. இதில் பலருக்கு திருப்தி..


**************************


எங்கள் இனயதள சார்பில்,தாங்கள் அளித்த விளக்கத்திற்கு நண்றி..

நிர்வாகம்
Home

Sunday, April 19, 2009

கல்லூரி கருவாகி , உருவாகி, வெளியாகிய காவியம்.PART - 3


தரித்திரத்தை மறைக்கலாம்
சரித்திரத்தை மறைக்கமுடியுமா???


"சிலர்,ஊசி முனையில், ஒட்டகத்தைக் கூட நுழைய வைத்து விடுவார்கள் தன்னுடைய ஆதாரமில்லாத எழுத்தால், ஆனால், தற்போது 'டைனோசரைய' நுழைய வைக்க முயலுவது!!! விளக்கம் சொல்லியேயே.............; 'முடியல'


நீடுர் இணைய தளத்திற்கும், புதுக்குளத்தான் அவர்களுக்கும், இளை. சிட்டிசனுக்கும், மற்றும் பழைய கல்லூரி மாணவருக்கும் இந்த, கீழ்க்கண்ட ஆதாரங்கள் பதிலாக அமையும்.


இதற்கான விபரங்களை வாஞ்ஜூர் பீர் முஹமது குடும்பத்தாரய விளக்கம் கேட்டால் என்ன? என்று எங்களுக்கு தோன்றியது. அதனால் அவர்களுடையெ மகனார்கள் 3 பேருக்கு மெயில் அனுப்பி கேட்டதில், எங்களை மதித்து, அவருடைய மகனார் ஒருவர், இந்த விபரங்களை மட்டும் அனுப்பினார், மேலும் நமக்கு எந்த விசயமாய், நாம் விளக்கம் கேட்கிறோமோ,
அதன் சம்பந்தமான விபரங்களை நமக்கு அளிக்க, அவரிடம் வேண்டுகோள் வைத்துள்ளோம்


டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி இளையான்குடி கேப்டன் அமீர் அலி உள்ளிட்ட சமூக ஆர்வலர்களால் 1970ம் ஆண்டு இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரி தொடங்கப்பட்டது"



"I too read a copy of the so called ,"The History of Illayangudi" by one Capt.Amir Ali and two others.The contents come across as self-glorification of an individual with vested interest"
(சொல்லுறதை சொல்லிட்டோம்.. புரிஞ்சவங்க புரிஞ்சுக்கோங்க;)
"இதற்கான விளக்கம் கீழே"


Mr.N.A. Ameer Ali appointed as Pricipal by Correspondent of Dr.ZHC. ( Dr ZHC Correspondent letter to DCE Madras)

Dr.ZHC Correspondent letter to Registrar University of Madurai


















அன்று நடந்த டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரித் தொடக்க விழாவில்,கல்லூரின் கரஸ்பான்டென்ட் ஹாஜி வி எம் பீர்முகம்மது ஆற்றிய வரவேற்புரை:‍= (ஆடியோ ரிக்கார்டிங்கிலிருந்து )

அஸ்ஸலமு அலைக்கும்..
அவைத்தலைவர் அவர்களே! மான்புமிகு அமைச்சர் அவர்களே! கல்லூரியை வாழ்த்த வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களே! பெரியோர்களே! ஆசிரியர்களே! நன்பர்களே! உங்கள் அணைவருக்கும் என்னுடையெ அன்பு கலந்த வணக்கம்.

அயராது பாடுபட்டு கட்டி முடித்த கல்லூரியின் தொடக்க நாள் இன்று நமது உள்ளங்கள் மகிழ்ச்சியினால் குதுகளிக்கும் நாள். இந்த விழாவிற்கு கண்ணியத்தின் காவலராம் காயிதேமில்லத் அல்ஹாஜ்.முஹமது இஸ்மாயில் சாஹிப். எம்.பி அவர்கள் தலைமை தாங்க இண்ங்கி சிறப்பு செய்திருப்பதால் எங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்கிற்து. அவர்களை கல்லூரிக்கழகத்தின் சார்பில் வருக வருக என்று வரவேற்கின்றேன்,

உயர் கல்வியை இவ்வட்டார மாணவர்களுக்கு அளிக்கவிருக்கும் இக்கல்லூரி கல்வி அமைச்சர் அவர்களால் திற்க்கப்படுவது குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.


மாண்புமிகு அமைச்சர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் இங்கு வந்து சிற்ப்பு செய்து இருப்பது எங்களது உள்ளத்தில் தேன் பாய்ச்சி உள்ளது நாவலர் அவர்களை இளையான்குடி கல்லூரியின் சார்பில் நெஞ்சார வருக வருக வரவேற்கின்றென்.

நமது கல்லூரிக்கு வாழ்த்து வழங்க வந்திருக்கும் மதுரை பல் கலைக்கழக ரிஜிஸ்தரர் திரு பெருமாள் அவர்களையும், வழக்கறிஞர் திரு பழனி வேல் ராஜன் அவர்களையும், நமது தொகுதி எம்.எல்.ஏ. திரு வி. மலைக்கண்னன் அவர்களையும் வருக வருக என்று மனமுவந்து வர வேற்கின்றேன்.

இக் கல்லூரி உருவாக உறுதுணையாக இருந்த உள்ளங்களையும்,கூடியுள்ள பெரியோர்களையும் ஆசிரியர்களையும், மாணவர்களையும் வருக வருக என்று
ஜாஹிர் உசேன் கல்லூரிக்கழக சார்பில் வரவேற்கின்றேன்.....


நிர்வாகிகள்
****************************

Friday, April 17, 2009

மூன்றாம் வெளிச்சம்.

முதல்வெளிச்சத்திலும், இரண்டாம் வெளிச்சத்திலும் வெளியாகி உள்ள கணவான்கள் இருவருக்கும் பல பின்னணி,சொந்தங்கள்,பந்தங்கள் உடன் பிற‌ப்புகள்,முன்னோர்களின் ஆஸ்தி ஆகிய பக்க பலங்களைக்கொண்டவர்கள்..

இளையான்குடியில் நெருங்கிய சொந்தங்களின் ஆதரவு இல்லாமல்,ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து,பிறக்கும் முன்னே தகப்பனை இழந்து,இரு சகோதரிகளுடன்,சொல்லமுடியாத வறுமையுடன்,படிக்க எவ்வித வசதியில்லாமலும் தன் குடும்பத்தை முன்னேற்ற எண்ணி தன்னந்தனியே கடும் உழைப்புடன் போராடி,ஆளும் வள‌ர்ந்து, அறிவும் வளர்ந்து, அதுதாண்டா வள‌ர்த்தி, என்பதற்கேற்ப, பின்னாளில் நல்லதொரு "வெளிச்சத்திற்கு" வந்தவர் இவர்

இதைத்தான் 'சிங்கம் சிங்கிளாக வரும்' என்று தற்சமயம் விளிம்புகிறார்கள்..

இனி இவரால் ஊருக்கு என்ன நன்மை?

இவருக்கு ஊர் என்ன செய்தது என்பதை விட

இவர் ஊருக்கு என்ன செய்தார்? என்பது தானே முக்கியம்!


'தனக்குப்பிறகுதான் தான‌மும்,த‌ர்மமும்'என்பது பழமொழி.


*தான் முன்னேற்றப்படிக்கட்டுகளில் ஏறும் போதே,தன் பின்னே பலரையும் கைகோர்த்து ஏற்றி விட்டவர். எப்படி???. தான், பல நபர்களுக்கு வேலை கொடுக்க வேன்டும் என்று எண்ணி 1940 களில் நமதூரில் 'ஜூபிடர் லெதர் ஒர்க்ஸ்'என்ற நிறுவன‌த்தை ஆரம்பித்து சுமார் 20லிருந்து 25 பேர் வாழ வழி வகுத்தவர்...

*தன்னுடைய சொந்த வீட்டின் கிணற்றிலிருந்து, நமது ஊர் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க,வீட்டின் வெளியே குழாய் வைத்து சப்ளை செய்து, தன்னால் இயன்றவரை தண்ணீர் பிரச்சனையை சமாளித்தவர்..

**மேலும் பஞ்சாயத்து தொட்டியிலிருந்து 2 இடத்தில் தன் சொந்த செலவில் பூமிக்கு அடியில் பைப் லைன் பதித்து, குழாய் வைத்து தண்ணீர் சப்ளை செய்ய‌ உதவியவர்..

*இளையான்குடி பெண்கள் உயர் நிலைப்பள்ளியை ஆரம்பிக்க 24/06/1963ல் தனது சொந்த கட்டிடத்தையும்(65,சுல்தான் அலாவுதீன் தெரு), பொருளும் கொடுத்து ஆரம்பித்து பின் முதல் தலைவர் ஜனாப் பி.எஸ். முஹமது இபுறாஹிம் அவர்களுக்குப்பின் தலைவராக இருந்து உழைத்து வந்தவர்..

*கவர்மென்ட் லோன் தங்கப்பத்திரம்,வார் ஃப‌ன்ட் (war fund), ஜவஹர்லால் நிதி மற்றைய மத்திய அரசு பொது நிதிகளுக்கு தாராளமாக கொடுத்தவர்..


*இளையான்குடியில் டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி தொடங்குவதற்காக,முதல் கட்டிடம் கட்ட மெயின் ரோட்டின் முகப்பு இடத்தை(2 ஏக்கர் 78 செண்டு) கிரையம் வாங்கி, இனாமாக எழுதிக் கொடுத்திருக்கிறார்..


**மேற்படி காலேஜுக்கு ஆரம்ப கட்டிடம் கட்ட, தன் சொந்த குடும்ப பெயரில் ஒரு கட்டிடத்தை யாருடைய உதவியும்,பொருளும் இல்லாமல், தன் சொந்த பொருளிலும்,உழைப்பிலும் கட்டிக் கொடுத்திருக்கிறார்..

***மேற்படி காலேஜ் முதல் கரஸ்பான்டன்ட் ஆக பணி புரிந்து அக் கட்டிடத்தையும், காலேஜையும் திற‌ப்புவிழாச்செய்து,கல்லூரி முதல்வராக ஜனாப் கேப்டன் அமீர் அலி,மற்றும் திரு.ஆல்பர்ட் தேவசகாயம்; ஜனாப்.பாதுஸா ; ஜனாப் உஸ்மான்; ஜனாப் சிக்கந்தர்; ஜனாப் கமாலுதீன்;திரு ராஜ சேகரன் மற்றும் சில மிகச் சிறந்த பேராசிரியர்,விரிவுரையாளர்களையும் நியமனம் செய்தவர்.


அன்று விதைத்த வித்து இன்று பூத்துக் குலுங்குகிறது..



*இளையான்குடியில், இந்திரா காங்கிரஸை (ஜெ.காங்கிரஸ், இண்டிகேட்), தானும், சாத்தனியைச் சார்ந்த சீமான் அவர்கள், ஜனாப். ஜக்கரியா அவர்கள். ஜனாப். அமுக்குடியான் சுக்கூர் அவர்கள். திரு. முத்து அவர்கள். எல்லோரும் சேர்ந்து கட்சியை, தன்னுடைய சொந்த கட்டிடத்தில்(94,காமராஜர் ரோடு மேல் மாடி) ஆரம்பித்து,தானே தலைவராக‌ தேர்தெடுக்கப்பட்டும், கட்சி வளர வகை செய்தவர்..


**இந்திரா காங்கிரஸை இளையான்குடியில் ஆரம்பித்து வைத்தத‌ற்காக அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி அம்மையார் கைப்பட எழுதிய வாழ்த்துக்கடிதம் பெற்றவர்..

*இளையான்குடி ஆண்கள் உயர் நிலைப்பள்ளி, 5வது நிர்வாக கமிட்டியில் பொக்கிசதார‌ராக இருந்து உள்ளார்..


*இளையான்குடி நெசவு பட்டடை ஜமாத் ட்ரஸ்ட் த‌லைவராகவும்,காரியதரிசியாகவும் இருந்து, மானேஜிங் ட்ரஸ்டியாக தேர்தல் மூலம் தேர்ந்த்தெடுக்கப்பட்டவர்.

** மேற்படி ஜமாத் பள்ளிக்கான பூர்வீக ஆதாரங்களைதிரட்டி ஆவணங்களை ஒழுங்குபடுத்தினார்..

***ஜமாத்துக்கு சொந்தமான வீடுகள்,கடைகள் ஆகியவற்றின் அடிமட்ட வாடகையை,தற்கால நிலமைக்கேற்ப,பல வழ‌க்குகள் மூலம் வெற்றிகண்டு வாடகை வருமான‌த்தை உயர்த்தினார்(இதனால் பல பகைகளை அல்லாவின் பள்ளிக்காக தேடிக்கொண்டவர்)..

****சிங்காரத் தோப்பின் முகப்பில்,தன்னுடைய செல்வாக்கால், ஆலிஜனாப்.தென்மலைக்கான் அப்துல் ரஹீம் அவர்களிடம் நன்கொடை பெற்று,' தென்மலைக்கான் மதுர கவி பாட்சா புலவர்' நினைவாக அரபி மத்ரஸா நிறுவியவர்..

*****சிங்காரத்தோப்பின் மதரஸாவுக்கு பக்கத்தில், தன் தமக்கை மரியம் பூவா நினைவாக காம்பவுன்ட் சுவர்,தன்னுடைய செலவில் எழுப்பினார்..


******பள்ளியின்,காமராஜர் ரோடு காம்பவுன்ட் சுவரை இடித்துவிட்டு,பள்ளியின் வருமான‌த்தை உயர்த்த,கீழே கடைகளும்,மேலே ரூம்களும் கட்டி விட்டவர்..

*******பள்ளிக்கென்று,ஒரு எலிமென்டரி ஸ்கூல் கட்ட,ஜாமாத்தாரிடம் அனுமதி வாங்கியவர்.இத் திட்டம் பிற்காலத்தில் நிறைவு பெற்றது..

********புதிய ஜும்மா பள்ளிக்கு ஜென்ரேட்டர் வாங்குவதற்காக அப்போதைய ட்ரஸ்டி ஜனாப் கே.டி.காஜா கமாலுதீனிடம் ஒரு தொகையை வழ‌ங்கினார்..

*கீழ முஸ்லீம் தெருவின் முடிவில்,தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 3 பெரிய கிணறுகள் போட்டு,தண்ணீரை பம்ப் மூலம் மேல் தொட்டியில் ஏற்றி, பெண்கள் மறைவாக குளிப்பத்ற்கு ஏதுவாக நாலாபுறமும் சுவர் கட்டி விட்டு,பெண்களின் பாராட்டைப்பெற்றவர்..


*அரியாண்டிபுரத்தில்,ஹரிஜன் குடியிருப்பு காலணிக்காக,தன்னுடய சொந்த நஞ்சை நிலத்தை (சுமார் 1 ஏக்கர் 70 சென்டு) அரசுக்கு தாணமாக வழங்கியுள்ளார்..

* இன்னும் நினைவில் சிக்காதவைகள் உள்ளன!


இவரைப் பற்றி பொதுவாக:

சீதன‌ம் கொடுப்பதும்,வாங்குவத‌ற்கும் மிக கடுமையான எதிரி.

இறைவனுக்கும்,தன் மனசாட்சிக்கும் தவிர வேறு யாருக்கேனும் அஞ்சியதில்லை என்பது ஊரரிந்த உண்மை..

இவருக்கு நமதூரிலும்,சென்னையிலும் ஜூபிடர் லெதர் ஒர்க்ஸ் என்ற நிறுவனமும்,சென்னை அங்கப்ப நாயக்கன் தெருவில், ஜூபிடர் லாட்ஜும்,சிங்கப்பூரில் காமன்வெல்த் ப்போர்ஸஸுக்கு அங்கீகாரம் பெற்ற கான்ட்ராக்டர் ஆகவும்,தொழில்கள் உள்ளன..

இவருடைய குடும்பமே,இளையான்குடியில் இருந்து முதன் முதலில் சிங்கப்பூரில் வசித்த குடும்பம் என்பது நிதர்சனமான உண்மை..

நமதூரில் விவசாயத்திற்கென்று வருமான‌ வரி கட்டியவர்கள் மூவர்,அதில் இவறொன்று,அண்ணாமலைச்செட்டியார்,தூங்காலயன் சிக்கந்தர் ஆகும்

1968,69 களில், 1 ஏக்கருக்கு நெல் விளைச்சல் மிக அதிகமான சாகுபடியைக்காட்டி இராமநாதபுர மாவட்டத்தின் சிறந்த விவசாயி என்று அரசாங்க கெஜட்டில் பதிவு பெற்றிருக்கிறார்..

1978,79 களில்,சிவகங்கை மவட்டத்திலே மல்பெரி செடி வள‌ர்த்து,அதன் மூலம் பட்டுப்புழு வளர்த்து,ஆல் இந்திய ரேடியோவில் பேட்டி காண‌ப்பட்டவர்..

சிங்கப்பூரில், சுப்ரீம் கோர்ட்டில், தனக்கு கிடைக்காத நியாயத்தின் வழ‌க்கை,லன்டனில் உள்ள மிக உயர்ந்த கோர்ட் ஆன "பிரிவி கவுன்சில்" "PRIVY COUNCIL"க்கு எடுத்துச் சென்று,வழ‌க்காடி, வெற்றி கண்டு, சிங்கையில் பிரபல நியூஸ் பேப்பரான "ஸ்டெரைட் டைம்ஸ்" ல் முதல் பக்கத்தில் முதல் செய்தியாக, வெளி வந்தது. இந்த பெருமைக்குரிய ஒரே இளையான்குடியைச் சார்ந்தவர் யார் என்றால் 'அவரும் இவரே'

"மாபெரும் சபைதனில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழ வேண்டும்
சிறு மாற்றுக்குறையாத மன்னவர்
இவரென்று போற்றி புகழ வேண்டும்"
"மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்சூர்.வி.எம். பீர் முஹமது" அவர்கள்
***************************************

New comment
fromAnonymous
toilycrazyboys@gmail.com

dateSat, Apr 18, 2009 at 10:12 PM
subject[இளையான்குடியின் வெளிச்சம்.]
.google.com

details 10:12 PM (5 minutes ago)

Anonymous has left a new comment on your post "மூன்றாம் வெளிச்சம்":

நான் கல்லுரியில் படிக்கும் காலத்தில் அன்றைய எங்களது முதல்வர் கேப்டன் அமீர் அலி அவர்கள் தன்னுடைய அலுவலகத்தில் ஹாஜி வி.எம்.பீர் முஹம்மது அவர்கள் ,அவர்கள் குடும்பத்தினர் அடங்கிய ஒரு பெரிய புகைபடத்தை மாட்டி அதன் கீழே தான் தன் இருக்கையில் அமர்ந்து பணியாற்றினார்கள் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

மேலும் அக்காலத்தே வேறு மற்ற யாருடைய புகைபடத்தையும் கல்லுரியின் எப்பகுதியிலும் நான் கண்டதில்லை.

என்னுடைய அக்காலத்து க்ரூப் மாணவர்கள் யாரையும் கேட்டு உறுதி படுத்திக் கொள்ளலாம்.

இவ்விணைய தளத்து பதிவுகளை காணும் பொழுது மனம் வேதனை அடைகிறது.


சாகிர் உசேன் கல்லூரி பழைய மாணவன்
Posted by Anonymous to இளையான்குடியின் வெளிச்சம். at April 18, 2009 7:42 PM

Thursday, April 16, 2009

கல்லூரி கருவாகி , உருவாகி, வெளியாகிய காவியம்.PART 2

அன்புச்சகோதரர் புதுகுளத்தான் அவர்களே!

விமர்சனத்திற்கு நன்றி..

"க‌ல்லூரி வ‌ர‌லாற்றின் க‌வின்மிகு நாட்க‌ள்! " என்ற‌ த‌லைப்பில் டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி வெள்ளி விழா ம‌ல‌ரில்,

தாங்கள் குறிப்பிட்டபடி வெளிவந்து உள்ளது என்பதை, 1997 ல் வெளி வந்த வெள்ளி விழா ம‌ல‌ரில்,எங்கள் குழு படித்து, வருத்தம் தெரிவித்துக்கொள்கிறது.

இது மட்டுமல்ல‌ இன்னும் ' நிறைய' தவறுகள் உள்ளன..இவைகள் யாவும் நிச்சயமாக திருத்தப்பட வேன்டியவையாகும்..

இது சின்னப்புத்திக்காரர்களின் சின்ன சின்ன ஆசை..

அற்ப சந்தோசத்திற்கு அலைந்து, தை யா த க் கா என்று ஆடியிருப்பார்கள்.. உண்மையை அவன் (அல்லாஹ்), 'கவின் மிகு நாட்களில்' (ஹியாமத் நாட்களில்) 'விழா' அறிவிப்பான். ஆமீன்.ஆமீன்.யாரப்பில் ஆலமின்....

சந்தோசப்படுங்கள்!

நல்லவேளை 1997ல், வாஞ்சூர்பீர்முகமதும்,எம்.எஸ்.முஹமது உசேனும் உயிருடன் இல்லை, இப்போது தான் தெரிய வருகிற்து இதே சின்னப் புத்திக்காரர்களின் கைங்கரியத்தில் தானோ, என்னவோ முதல் ப‌ஞ்சாயத்து போர்டு தேர்தலில் இருவரையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்து ரசித்த மனம், இன்றும் ஆவலுடன் அலைகிறார்கள்..

முக்கியமாக, இருவரும் வீன் பெருமைக்கும், புகழ்ச்சிகளுக்கும் ஆசைப்பட்டவர்களில்லை, இருவருமே அமைதியான‌வர்கள், ஆரோக்கியமான சிந்தனை உடையவர்கள், இருவருக்குமே ஒரே தொழில்(தோல் பேக் செய்தல்) கூட, ஒரு சில கல் மனம் கொன்ட கயவர்களின் வேலைகள், இப்படி தான் தோன்றிதனமாய், அறிவு ஆறாக‌, தம்மைப்பற்றி நினைத்துக் கொன்டு எழுதுபவர்களை, அதுவும் அவ்விருவரும் உயிரோடு இல்லாத போதிலும் எழுதுபவர்களை? உன்னிடமே விட்டு விடுகிறோம் அல்லாவே!

இம் மலரில் நிறைய தவறுகளும். உண்மை ம‌றைக்கப்பட்டும் உள்ளதை நாம் அறிவோம்..இவையெல்லாம் ஒவ்வொன்றாக < வெளிச்சத்திற்கு > கொன்டு வரப்படும்..
"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்

ஆதவன் மறைவதில்லை...........
ஆணைகளிட்டே யார் தடுத்தாலும்

அலைகடல் ஓய்வதில்லை......."
***********************

Monday, April 13, 2009

கல்லூரி கருவாகி , உருவாகி, வெளியாகிய காவியம்....PART 1.

" வளர்ந்த கதை மறந்து விட்டால் கேளடா கண்னா!
மறைத்து வைத்த ஓவியத்தை பாரடா கண்னா


'ஓதுக'
உம் இறைவன்
திருபெயரால்
:

இளையாங்குடி கல்லூரி கழக அறிக்கை. 1970

படித்து பல‌ அறியாத உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

க‌ல்லூரி க‌ழக‌ ஸ்தாபக‌ம். வ‌ர‌லாறு. 12.9.1968 லிருந்து
வ‌ர‌வு செலவு க‌ண‌க்கு
CLICK> பக்கம் 6
க‌ல்லூரி க‌ழக‌ அர‌ம்ப‌ கால‌ அங்க‌த்தின‌ர்க‌ள்
CLICK> பக்கம் 7

CLICK> பக்கம் 8

CLICK> பக்கம் 9

CLICK> பக்கம் 10

CLICK> பக்கம் 11

CLICK> பக்கம் 12

CLICK> பக்கம் 13

க‌ல்லூரிக்கு நில‌ம் வாங்க‌ ப‌ண‌ம் கொடுத்த‌வ‌ர்க‌ள்.
CLICK> பக்கம் 15

CLICK> பக்கம் 16
க‌ல்லூரிக்கு நில‌ம் தான‌ம் செய்த‌வ்ர்க‌ள்
CLICK> பக்கம் 17

க‌ல்லூரிக்கு நில‌ம் விற்ற‌வ‌ர்க‌ள்
CLICK> பக்கம் 18

க‌ல்லூரிக்கு என்டோமென்ட் நில தானம் செய்தவர்கள்.
CLICK> பக்கம் 19


மேலே கண்ட அறிக்கையில் சிகப்பு மையால் கோடிட்ட வாக்கியத்தின்படி, 1969ல் இளையான்குடி வந்து,

இளையாங்குடிக்கு ஒரு கல்லூரி அவசியம் வரவேண்டும் என்ற‌ எண்ணம் ஊர் நல தொண்டர்களிடையே உருவாகி கல்லூரி ஒன்று கட்ட அரசாங்க அனுமதி பெற்றிருந்தும் ,

அச்சமயம் அதை நம் ஊரார்களால் நிறைவு செய்ய முடியாமல்,

பல உள்ளூர் ,வெளியூர் செல்வந்தர்களிடம் நம் ஊர் பிரமுகர்கள் ஒன்று கூடி அணுகியும் அணுகப்பட்ட ஒருவரும் முன் வராத நிலையில் ,

விதிக்கப்பட்ட கால கெடுவுக்குள் அதை செயல் படுத்தாவிட்டால் கல்லூரி அமையும் அமைக்கும் வாய்ப்பு மற்ற ஊர்களுக்கு மாற்றி விடப்பட்டு விடும் என இக்கட்டான சூழ்நிலையில்,

தானே தனித்து கல்லூரி தொடங்க இடத்துடன் கட்டிடமும் கட்டித்தருகிறேன் என்று மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் மட்டுமே முன் வந்து

அச்சமயம் சில ஊர் பிரமுகர்கள் மறைமுகமாக இளையாங்குடி கல்லூரிக்கு " வாஞ்ஜூர் பீர் முஹம்மது கல்லூரி " என்று பெயர் வைக்கலாம் என கருத்து தெரிவித்த பொழுது அதை தன்னடக்கத்துடன் மறுத்து விட்டு.

மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் Dr.சாகிர் உசேன் கல்லூரியை நிறுவ தானே Dr. சாகிர் உசேன் காலேஜுக்கு ஆரம்ப கட்டிடம் கட்ட, இளையான்குடி‍‍-பரமக்குடி ரஸ்தாவில் மெயின் ரோட்டின் முகப்பு இடத்தை 2 ஏக்கர் 78 கிரையம் வாங்கி, இனாமாக எழுதிக் கொடுத்து
ஏப்ரல் 28 ல் அன்றைய மாநில கவர்னர் மேன்மை தங்கிய சர்தார் உஜ்ஜல் சிங் அவர்களை அழைத்து மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் கல்லூரிக்காக இனாமாக கொடுத்த இடத்தில் அடிக்கல் நாட்டி,

மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் இளையாங்குடி ஜாகிர் உசேன் கல்லூரியின் ஸ்தாப‌க‌ தாளாள‌ராக‌(FOUNDER CORRESPONDENT) பொறுப்பேற்று,

அந்த இடத்தில் மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் தானே தன் சொந்த குடும்ப பெயரில் ஒரு கட்டிடத்தை ஜனாப் அல்ஹாஜ் பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடம் என்று முழுமையாக‌ யாருடைய உதவியும்,பொருளும் இல்லாமல், தன் சொந்த பொருளிலும்,உழைப்பிலும் கட்டிக் கொடுத்து,

1970 ஜூலை 5 ல் கண்ணியமிக்க காயிதே மில்லத் அல்ஹாஜ் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் தலைமையில் அக்கட்டிடத்தை திறப்பு செய்து அதிலிருந்தே அன்றைய கல்வி அமைச்சர் மாண்புமிகு இரா. நெடுஞ்செழியன் அவர்களைக் கொண்டு இளையாங்குடி Dr. சாகிர் உசேன் உசேன் கல்லூரி தொடங்கப்பட்டு,

அல்ஹாஜ் V.M. பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடத்தில் இளையாங்குடி Dr.சாகிர் உசேன் உசேன் கல்லூரி 5.7.1970ல் ஸ்தாபிக்கப்பட்டது.

இளையாங்குடி ஜாகிர் உசேன் கல்லூரியின் ஸ்தாப‌க‌ தாளாள‌ராக‌ (FOUNDER CORRESPONDENT) மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்களே கல்லூரியின் முத‌ல்வ‌ர், பேராசிய‌ர்க‌ள் ம‌ற்றும் ஊழிய‌ர்க‌ளை தேர்வு செய்து,

ஜூலை 1970ல் Pre-University l Level ல் 173 மாணவர்களுடன் ஜனாப் அல்ஹாஜ் பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடத்தில் Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடங்கி செயல் பட செய்தார்கள்..

*************************